திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார்.
திருச்சி மாவட்டம் காரைப்பட்டி அடுத்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி – 59. இவர் துவரங்குறிச்சி-செந்துறை செல்லும் சாலையில் உள்ள புங்கமரத்தின் கிளைகள் தனது தோட்டத்திற்கு செல்லும் மின்சார வயர்களில் உரசுவதால் அந்த கிளைகளை 25.09.22 அன்று வெட்டியுள்ளார்.
இதனை அறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று அவர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலையில் ஓரத்தில் வைத்த மரங்களை வெட்டியதற்கு அனுமதி கூறவில்லை என்று நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சமாக 50,000 கேட்டுள்ளார்.
இதற்கு சுப்பிரமணியன் பேரம் பேசி ரூ 10000 தருவதாககூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தாசில்தார் லட்சுமியிடம் – சுப்பிரமணியன் பத்தாயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் வட்டாச்சியர் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.