தஞ்சையில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் இல்ல திருமண விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் தஞ்சையை சேர்ந்த சி.சுபாஷ் சந்திரபோஸ்- மேகலா சுபாஷ் சந்திரபோஸ் தம்பதியின் மகள் சவிதா, தஞ்சை வடகால் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்- மங்கையர்க்கரசி தம்பதியின் மகனும், வாண்டையார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியருமான சரவணகுமார் ஆகியோரின் திருமணம் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சன்னதியில் நடந்தது. அதனைத் தஞ்சை நாகை ரோடு வாண்டையார் மகாலில் காலை 9 தொடர்ந்து மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரபோஸ் வரவேற்றார். இந்த திருமண விழாவின் போது தமிழினி புலனக்குழு சார்பில் மணமக்களுக்கு 100 மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து மண்டப வளாகத்தில் மண மக்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவில் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே சினிமா பட பாணியில் உதவி ஆணையர் சுபாஷ் சந்திர போஸ், மணமக்களின் செல்போன்களை மாற்றிகொடுத்து பேசினார். அப்போது அவர், ‘செல்போனினால் வரும் இடையூறுகளை தவிர்க்க அவற்றை தவிர்த்து இனிமையாக வாழ புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என கூறி, திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
இதனை அடுத்து இசைச்சாரல் என்னும் அமைப்பை நடத்தி வரும் ராகவ் மகேசுக்கு மணமக்கள் கீபோர்ட் இசைக் கருவியை பரிசளித்தனர். விழாவில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன், தனிப்பி பரிவு இன்ஸ்பெக்டர் மணிவேல், திரைப்பட பாடகர் அந்தோணி தாசன், வக்கீல் எஸ்.எஸ்.ராஜ்குமார், பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன், புதுக்கோட்டை கவிஞர் தங்கமூர்த்தி, தஞ்சை மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, புலவர் கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் தமிழினி புலன குழுவினர், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ் ஆசிரியர் சிவகுமார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.