தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர், (மண்டலம்) நாகப்பட்டினம், இளம்வழுதி. மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர், தஞ்சாவூர் சிவக்குமார் அவர்களின் அறிவுரையின்படி மீன்வள ஆய்வாளர்கள், மல்லிப்பட்டினம், பி.கெங்கேஸ்வரி மற்றும் மீன்வள சார் ஆய்வாளர், சேதுபாவாசத்திரம் ஆனந்த் மற்றும் சாகர்மித்ரா பணியாளர்கள், அப்துல் நிவாஸ், கார்திக்கேயன் மற்றும் ஐயபிரதா ஆகியோருடன் கீழத்தோட்டம் கடற்கரையிலிருந்து புறப்பட்டு நேரடியாக முத்துப்பேட்டை மீன்பிடி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது, 2என்எம் தொலைவில் ஒரு ஜோடி இழுவை படகுகள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அருகில் சென்ற போது ஒரு விசைப்படகு விரைந்து சென்றுவிட்டது. மற்றொரு படகு கண்டறியபட்டது மேலும் ஒரு விசைப்படகு 2 என்எம் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது கண்டறியபட்டு தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்கு முறை சட்டம் 1983-ன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தவறு செய்யும் படகு உரிமையாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.