மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின் அனைத்து தாலுக்காக்கள் சார்பில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை சிறப்பிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பொது சுகாதார துறையின் அனைத்து துறையில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர். விழாவில் பணியாளர்கள் அனைவரும் தேசிய கொடியின் வண்ணங்கள் கொண்ட பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டனர்.
இந்த விழாவின்போது மேடையில் சுகாதார துறையின் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் சுகாதாரத்துறை வேலைகளை சலிப்பில்லாமல் செய்யவும், உற்சாகத்துடன் செயல்படவும், நோய்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விழாவில் சுகாரத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.