ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனே
ஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனே
வறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்
வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே
உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதை
உண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலே
நினைப்பது ஆயிரந்தா எண்ணங்களே அதில்
நிலைப்பது வறுமையின் சின்னங்களே
ஓட்டிய வயிறுடனே வருகையிலே சூரியன்
ஒளிந்திடும் மேல்திசை வானத்திலே
கட்டிய மனைவியோ சோகத்திலே பிள்ளை
கஞ்சிக்கழும் பசித்தாகத்திலே
செல்வம் நிறைந்தால் ஒட்டியுறவாடு முலகம்
செல்வம் இல்லையென்றால் எட்டியுதைக்கும் உலகம்
இதுதாண்டா உலக மனிதா
இதுதாண்டா உலகம்
– சி.அடைக்கலம்,
நெய்வேலி வடபாதி,
பள்ளத்தான்மனை