தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 02.12.2022 அன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார் IPS அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட காவல் அலுவலகம் (DPO), தனிப் பிரிவு அலுவலகம் (Special Branch), மாவட்ட குற்ற ஆவண காப்பகம் (DCRB), நிலம் அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (ALGSC), மாவட்ட குற்றப்பிரிவு (DCB), தொழில்நுட்ப பிரிவு (Technical Cell) ஆகிய பிரிவுகளில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயப்டுவதாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்கள் உடனிருந்தார்.