திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று கொரோனா அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார். மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி படுக்கை வசதி அமைப்பது குறித்து, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.