செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் . 90 வயது முதியவரான இவர், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு, சொந்த வேலையாக சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய ஜானகிராமன், சாலையை கடக்கும் போது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். இதைகண்ட மதுராந்தகம் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், முதியவரை தானே கையில் தூக்கிச் சென்று தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதலில் மதுராந்தகம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜானகிராமன், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.