கடலோடு காற்றுரச கடலலைகள் எழுந்தாடும்
கார்மேகங்கள் குளிராகி விண்ணகத்தில் விளையாடும்
மாலைநேரத்து வான்நிலா மார்கழியை குளிப்பாட்டும்
மஞ்சத்தில் வெண்பனிகள் இருளையும் இதமாக்கும்
சூரியனும் சந்திரனும் சூடாகுளிரா போட்டிபோட
சுகங்களை இருவருமே பங்குபோட்டு கூட்டிபோக
காடுகளும் மலைகளும் கார்முகிலோடு கலந்தாட
கட்டித்தழுவி முத்தமிட சாரல்தூரலாய் தென்றலாட
நிலாப்பெண் மானிடனின் நித்திரைக்குள் நிழலாட
நிலவுக்கும் குளிருக்கும் நடுவிலே நானாட
கார்த்திகையில் கால்குளிரும் மார்கழியில் மனம்குளிரும்
கட்டிலிலே கண்யர்ந்தால் பஞ்சணையிலும் பனிமலரும்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்