வேலூர் மாவட்ட காவல் துணைத்தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது (ம) வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
️இந்த நிலையில் 28.01.2023-ம் தேதி அன்று உதவி ஆய்வாளர் குப்பன், அவர்கள் தலைமையிலான போலீசார் வளத்தூர் பேருந்து நிலையம் அருகே சோதனை செய்து கொண்டிருந்த பொழுது எதிரி நீலகண்டன் S/o ஆனந்தன், மேல்பாடி என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.