சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த முரசொலி நாளிதழின் துணை ஆசிரியர் திரு. மு.ராஜா (56) அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னதாக அன்னாரது திருஉருவப் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், பொதுச் செயலாளர் பீப்பிள் டுடே ஆசிரியர் G.சத்யநாராயணன், பொருளாளர் வெற்றி யுகம் ஆசிரியர் எம்.காமேஷ் கண்ணன், துணைத் தலைவர் நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் ஆர்.சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் எம்.கிருஷ்ணவேணி, துணைச் செயலாளர் தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் கி.வினோத், அமைப்புச் செயலாளர்கள் விழுதுகள் ஆசிரியர், G.விஜயகுமார், ஆரம்பம் ஆசிரியர் சி.ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் மண்ணின் குரல் ஆசிரியர் அ.சரவணன், நமது நகரம் புகழேந்தி, பீப்பிள் டுடே இளையராஜா, தர்ம ராஜ்ஜியம் பாஸ்கரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.