25.02.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் செந்தூர் முத்து மஹாலில் சிறப்பாக நடைபெற்ற சட்ட களஞ்சியம் மாத இதழ் பத்திரிகை தோழமைகள் மற்றும் இதர பத்திரிகை அன்பர்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தில் இணையும் விழா மற்றும் பத்திரிகையாளருக்கு ரூ 1 லட்சம் விபத்து காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ் நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைவர் திரு.எஸ்.சரவணன் பொதுச்செயலாளர் திரு.சத்தியநாராயணன் துணைத்தலைவர் திரு.P.ராஜன், துணைச்செயலாளர் திரு.பொன்.ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு அட்டையை வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்குமார் அவர்கள் வழங்கினார்கள். சங்க அடையாள அட்டையை தலைவர் சரவணன் வழங்கினார்கள்.
