ஒரு சொத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பத்திரம். பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம். நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால் சொத்துக்களின் உரிமைகளை வழங்குகிறது. சிலர் பட்டா மட்டும் தான் வைத்திருப்பார்கள். இதனால் ஏதும் பிரச்சனை வருமா.! மற்றும் பட்டாவை எப்படி பத்திரமாக மாற்றுவது என தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பட்டா என்பது ஒரு நிலம் இவர் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று ஆகும். அதாவது பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்று சொல்லப்படுகிறது. அந்த பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர் ஆவார். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், விரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்த்தீரம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் ஆகியவை இருக்கும்.
பட்டாவை பத்திரமாக மாற்ற முடியாது. இதனால் உங்களுக்கு பல கேள்விகள் ஏற்படும். அதனின் ஒவ்வொரு கேள்வி மற்றும் பதில்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களிடம் பட்டா மட்டும் தான் உள்ளது. இதனால் பிரச்சனை வருமா என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் பட்டாவே போதுமானது. நம் முன்னோர்கள் காலத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களில் வாழ்ந்து வந்தவர்களுக்கு பட்டா மட்டுமே வழங்கியது.
பட்டா மட்டும் இருந்தால் இடத்தை விற்பனை செய்ய முடியுமா என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் பட்டா மற்றும் பத்திரம் இரண்டும் இருந்தாலே இடத்தை விற்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் பத்திரம் இல்லாததை யாரும் வாங்க மாட்டார்கள்.
பட்டாவில் ஒரு பெயரும், பத்திரத்தில் ஒரு பெயரும் இருக்கலாமா என்றால் இருக்க கூடாது. இரண்டிலும் ஒரே பெயர் தான் இருக்க வேண்டும்.