இறைவன் இயக்கும் இனிமையான பூலோகம்
இயற்கை தேவதையின் பசுமையான எழிலகம்
வாழ்க்கை வசந்தமாய் வாழவைக்கும் வாழிடம்
வந்துபோவோரை வாரிதந்து வசதியாக்கும் புகலிடம்
நாடெனும் மரத்தில் தேன்கூடாய் குடும்பங்கள்
நாளைந்து உறவுகளாய்
வீட்டுக்குள் வாழ்ந்திடும் மனிதர்கள்
வாழ்வை வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களிடம் வார்த்தைகளை வசப்படுத்தி உயர்ந்திடும் கற்றோர்கள்
ஆணும் பெண்ணுமாய் இல்லறம் கொஞ்சகாலம்
ஆதவனின் நிழலில் அமைதியான பொற்காலம்
ஆசைக்கு பெண்பிள்ளை
ஆஸ்திக்கு ஆண்பிள்ளை
அனைவரிடமும் அன்போடு இருப்பது
பாசத்தின்எல்லை
பிள்ளைகளை உயர்த்துதலே பெற்றோர்களின் உயிர்மூச்சு
பெருமையாக பேசிக்கொள்வதே வாழ்ந்திடும் வாழ்க்கையாச்சு
பேரன்பேத்திகள் தாய்தந்தையர் தலைமுறைக்கு பெருமையாச்சு
பிறந்ததற்கான அடையாளம்
மானமே பெரிசாச்சு
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்