நிலவுங்கூட சூரியனை காதலித்தது
சூரியனும் நிலவுமீதுக் காதல் கொண்டது
பார்த்திருந்த விண்மீன்கள் சேர்த்து வைக்க
வரும்போது நேரந்தடுத்தது அதுநின்று போனது
பூமியை தினஞ் சுற்றுவது சூரியன் கடமை
அதனால் காதல் பெரியதா அல்லது
கடமை பெரியதா என்று அறிவென்னும்
துலாகோலால் எடை வைத்தது
காதலென்பது வாடியது கடமை என்பது
கூடியது காதலை மறந்து விட்டு
கடமையை ஏற்றுக்கொண்டது சூரியன்
அதுநீதியின் கட்டளையா அல்லது நேரத்தின் தீர்ப்பா
இரவுங்கூட பகலைப்பார்க்க, நாளும் நினைத்தது
பகலுங்கூட இரவைக் காண தினமு மலைந்தது
இரவும் பகலுஞ் சேர்ந்து ஒரு நாளானது
இரண்டுஞ் சேர்ந்து கலந்துபேச காலந் தடுத்தது
இதுகடவுள் கட்டளையா அல்லது காலத்தின் தீர்ப்பா
நீதியின் நுண்ணறிவே நீகூறு விடை இதற்கு
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு,
பள்ளத்தான்மனை