உண்டு தீர்த்தது போதும் இனிமேல் உழுது பார்க்க ஆசை! மீட்டெடுக்க வேண்டும் விவசாயத்தை விரைந்து வாருங்கள்!
சினிமா பார்ப்பவர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் சோறு சாப்பிடும் நாமெல்லாம் விவசாயம் செய்ய ஆசைப்படுவதில்லை.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்.
தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல் உன் உணவுக்காக மண்ணில் போடுகிறான் விவசாயி! விவசாயத்தை துறந்த நாடும் விவசாயத்தை மறந்த நாடும் ஒருபோதும் உருப்பட முடியாது.
நான் என்னதான் பட்டம் படித்திருந்தாலும் என் அப்பாவின் வியர்வை என் இரத்தத்தில் கலந்ததாலோ என்னவோ தெரியவில்லை. விவசாயத்தை விட்டு கொடுக்க முடியவில்லை.
போலியான மருத்துவர் போலியான பொறியாளர் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எங்கேயும் போலியான விவசாயி என்று கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் விவசாயிகளுக்கு போலியாக இருக்கவும் தெரியாது. போலியாக நடிக்கவும் தெரியாது.
பணம் இருந்தும் பட்டினி இருக்கும் நாள் வரும். அப்போது தான் விவசாயிகளின் அருமை உணர்வீர்கள்.
காட்டில் வேலை செய்பவனை கேவலமாகவும், கணிணியில் வேலை செய்பவனை கௌரவமாகவும் நினைப்பவர்களுக்கு தெரியவில்லை. “அரிசியை” இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்ய முடியாது என்று..!
கால்வயிறு கஞ்சி குடித்துவிட்டு இவர்கள் விவசாயம் செய்வதனால் தான் நீ மூன்று வேளையும் சுடுசோறு சாப்பிடுகிறாய் என்பதை மறந்துவிடாதே! தகுதி பார்க்கும் மக்களே.. விவசாயிகளின் கால்பட்ட அரிசியை தான் கழுவி உண்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
படித்தால் தான் வேலை கை நிறைய சம்பளம் என்று சொல்லி தரும் சமூகம் விதைத்தால் தான் சோறு என்பதை சொல்லித்தர மறந்துவிட்டது. அதனால் தான் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. விவசாயம் காப்போம். உழைக்கும் எண்ணமோ உயர்வு தரும். உழவன் எண்ணம் நமக்கு உணவு தரும்.. விவசாயம் காப்போம்!
என் குலத்தவன் செய்த விவசாயம் கல்லையும் கரைய செய்தது. மண்ணையும் மணக்க செய்தது.
பசியை நீக்கியவன் தாய் என்றால் என் விவசாயியும் தாயே!
நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்பதற்காக, விவசாயத்தின் அழிவை வேடிக்கை பார்க்காதீர்கள். நாளை உங்கள் பிள்ளைகள் உணவிற்காக கையேந்தும் நிலை வரலாம்.
விவசாயத்தை காப்போம்..
எதிர்காலத்தை மீட்போம்..
விவசாயத்தை காப்போம்..
விவசாயிகளை மதிப்போம்…
அவர்கள் நமக்காக விதைத்த விதை செழிப்பாக வளர்ந்தது!
அவர்களுக்காக விதைத்த விதை..?
– பூங்கொடி