பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நத்தம் காலி மனை இடங்கள், ஏரி, குளங்கள் உட்பட பல இருந்தது. ஆனால் அவற்றை முன்னாள் வட்ட துணை ஆய்வாளர் நோட்டரி பப்ளிக் உதவியுடன் முறையான ஆவணங்களின்றி விற்பனை செய்து கோடிகளை வாரிச்சுருட்டி இருப்பது தெரியவருகிறது.
மேலும் தற்போதுள்ள வட்ட துணை ஆய்வாளர் விரைவில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் அந்த காலி இடத்தை நிரப்ப சில பல லட்சங்களில் பேரம் பேசப்படுவதாக நமக்கு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. தமிழகத்திலேயே தாமதமாக பட்டா வழங்கப்படும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சை உள்ள நிலையில் முறையான ஆவணங்களோடு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பட்டாவிற்காக ஏராளமான பொதுமக்கள் வருட கணக்கில் அலைந்துதிரியும் நிலை நம் அனைவரும் அறிந்ததே. இப்படியிருக்க முறையான ஆவணங்களின்றி அரசு இடங்களை அரசுக்கே தெரியாமல் விற்றுத் தீர்த்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆதாரங்களுடன் விரிவான செய்தி அடுத்த இதழில்…