தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:
2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து 20ம் தேதி முதல் மே 18ம் தேதிவரை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான சேர்கை விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். மே 18ம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் தகுதியுள்ளவை குறித்து மே 21ம் தேதி வெளிபிடப்படும். எல்.கே.ஜி வகுப்புக்கு விண்ணப்பிப்போர் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020க்குள்ளும்,முதல் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்று,வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வீண்ணப்பிக்க சாதிச் சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புபிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்று, நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க ஆண்டு வருவாய் 2 லட்சத்துக்கு கீழ் உள்ள வருமானச் சான்று, இருப்பிடச் சான்று -ஆகியவை தாக்கல் செய்யவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் சம்பத்தப்பட்பள்ளியில் மே 25ம் தேதியில் குலுக்கல் நடத்தி குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். மே 29ம் தேதி சம்பத்தப்பட்ட பள்ளியில் சேர்க்கவேண்டும்.