வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப் பேரவையில் நடத்தது. அப்போது பேரவை உறுப்பினர்கள் பல கேள்விகள், கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். இறுதியாக அவற்றுக்கு அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலளித்துப் பேசியதாவது முதியோர் உதவித் தொகையை முறையாகவும், சரியாகவும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் இனி ஆன்னிலைனில் மட்டுமே வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுக்கு 15 நாளில் தீர்வு காணப்படும். நாங்கள் இந்த பொறுப்புக்கு வத்தபோது 46 ஆயிரத்து 500 மனுக்கள் நிலுவையில் இருந்தன. தற்போது 270 மனுக்கள் தான் நிலுவையில் இருக்கின்றன. 35லட் சம் பேருக்கு முதியோர் உதவித்தொகைகொடுக்க வேண்டும், இந்த ஆண்டு 3 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆய்வு செய்யப்பட்டு சரியான நபர்கள் என்று கண்டறியப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு திரும்ப உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். இப்போது 36 எட்சம்பேருக்கு கொடுக்க வேண்டும். என்று உத்தரவி
டப்பட்டுள்ளது.
விட்டு மனைப்பட்டா:
அரசு புறம்போக்கில் வசிக்கின்றவர்களுக்கு பட்டா வழங்கப்படமாட்டாது. மாறாக அரசு கிராம நத்தம் என்ற இடங்களில் வசிக்கின்றவர்களுக்கு பட்டாவழங்க வழிவகை உள்ளது தமிழ்நாட்டில் 48 ஆயிரம் இருளரில், 37 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு சில இடங்களில் எஸ்.சி மற்றும் பி.சி பிரிவினருக்கு இடம்கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. பெரியார் வீட்டுக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டுக்கும் கூட பட்டா இல்லை. தமிழ் நாட்டில் 6 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு பட்டா மாற்றி வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்தந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏக்கள் உரிய விவரங்களை திரட்டிக் கொடுத்தால் அனைத்தும் செய்து கொடுக்கிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் பதிலளித்தார்.