முதுமலைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்ற நீலகிரி மாவட்ட எஸ்.பி.முனைவர் K.பிரபாகர்,அதற்காக உடன் இணைந்து திறம்பட பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் ஆகியோரை பாராட்டி அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்துத் வியப்பில் ஆழ்த்தினார். இது காவல் துறையினருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு, மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது என காவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.