வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.E.திருநாவுக்கரசு, குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.ராமமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.N.C.சாரதி ஆகியோரின் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 7 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், 15 தனிப்பிரிவு காவல் ஆளிநர்கள், 15 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆளிநர்கள் என மொத்தம் 165 போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் வேப்பங்குப்பம், அணைக்கட்டு, அரியூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட 40 க்கும் மேற்பட்ட மலை பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டை நடத்தப்பட்டதில் 17,350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அவற்றை காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 50 பேரல்கள், 42 அடுப்புகளை கண்டுபிடித்து அழித்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதியப்படவுள்ளது.
மேலும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழித்திட இதேபோன்ற தொடர் மதுவிலக்கு வேட்டைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.