T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார் அவர்கள் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது KTM DUKE மற்றும் YAMAHA MT-15 இரண்டு உயர் ராக உயர் ரக இருசக்கர வாகனத்தை திருடியவர்களை தலைமை காவலர் விஜயபாஸ்கர், காவலர் பிரசாந்த், காவலர் பழனிக்குமார் ஆகியாருடன் மடக்கிபிடித்தபோது கேரளாவில் இருந்து சிகிச்சைக்காக வந்த ஆமெக் என்பவரின் KTM வாகனத்தையும், படப்பையில் இருந்து பாலாஜி மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்காக வந்த நவீன் என்பவரின் yamaha இருசக்கார வாகனத்தையும் திருடியதாக தெரிய வந்தாதால் அவர்களை தொடர்ந்து விசாரணை செய்தனர்.
விசாரனையில் இவர்கள் ஏற்கனவே டிஸ்கவர் இருசக்கார வாகனத்தை திருடி வைத்திருந்ததும் GST சலையில் ஒரு பெண்ணிடம் செயின் பரிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தாதால் குரோம்பேட்டை துர்கா நகரை சேர்ந்த ரமேஷ் வயது 17, உன்னிஸ்ரீ வயது 17, சஞ்சய் வயது 17 ஆகிய 3 இளஞ்சிறார்களிடமிருந்தும் திருடிய பொருட்களான 3 இருசக்கார வாகனம் மற்றும் தாங்க செயினை கைப்பற்றி திருடியவர்களை நீதிமன்றம் காவலுக்கு அனுப்பபட்டது.