மனதின் அவதாரங்கள் மனிதனின் தந்திரங்கள்
மயங்கிடும் சிந்தனைகள் மயக்கிடும் மந்திரங்கள்
ஏழைகளின் எழுச்சிகள் ஏக்கத்தின் சுழற்சிகள்
ஏற்றத்தின் ஏணிகளில் ஏறிஇறங்கும் உணர்ச்சிகள்
ஆசையின் வேஷங்கள் இதயத்தின் கோஷங்கள்
ஆணவத்தின் கோபங்கள் அடங்காத சாபங்கள்
உள்ளுக்குள்ளே உதிரங்கள் உருண்டோடும் உருவங்கள்
உள்ளத்தில் உறவாடும் உண்மையின் உணர்வுகள்
தீமைகள் நடைபோட்டால் தீராத ஆசைகள்
தீங்கு விளைந்துவிட்டால் தெரிந்திடும் ஓசைகள்
ஆண்பெண் இணைகளில் அன்புக்கு பஞ்சமில்லை
அடிதடி தகராறில் மனமுறிவும் கொஞ்சமில்லை
இளமையின் துள்ளலில் எழுந்திடும் இன்பமயம்
முதுமையின் முடிவுரையில் வீழ்ந்திடும் வாழ்வேமாயம்
உடலின் இயக்கம் இதயத்தில் துவக்கம்
ஊழ்வினையின் ஆக்கம் அவதாரங்களாய் எடுக்கும்
சிந்தனைகளும் கனவுகளும் வெளிஉலகில் சிறகடிக்கும்
செயல்படுத்த மனதில் அவதாரம் எடுக்கும்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்