போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டியை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 01.05.2023 அன்று நடத்தியது. இப்போட்டியில் ஆற்காடு வரதராஜுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவன் லோகேஷ்- ஒரு மது பாட்டிலுக்குள் மனிதனாகச் சென்று எலும்பு கூடாக வெளிவரும் மனிதன் ஓவியத்தை மிக எளிமையாகவும் தத்துரூபமாகவும் வரைந்திருந்தார். அவ் ஓவியம் வேலூர் சரக டிஜஜி M.S. முத்துசாமி IPS அவர்களின் நெஞ்சம் கவர்ந்தது. மாணவன் லோகேஷை நேரில் சென்று பாராட்டினார்.