‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி. ஆனால் இன்றைய நிலையில் தெய்வமாவது நின்று கொல்லும் ஆனால் அரசு கொல்லுமா கொல்லாதா என்பதே தெரியாது என்ற நிலையில் தான் உள்ளது அரசு இயந்திரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்வுக்காக காத்து கணிசமான அளவில் தேங்கி கிடக்கும் மனுக்களின் எண்ணிக்கையும், அவற்றின் மீதான விசாரணை கோப்புகளின் எண்ணிக்கையும்.இவ்வாறு பணிகள் தேங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக ‘நான் கலெக்டரின் சொந்தக்காரர்’ என்று கூறிக்கொண்டு தனக்கு உண்டான வேலைகளை உதாசீனப்படுத்துவதும் மற்றவர்கள் வேலையை தடுத்து தொந்தரவு செய்வதுமாக இருந்து வரும் பி செக்க்ஷன் கூடுதல் துணை வட்டாட்சியர் ஆக இருக்கும் அதிகாரி செந்தில் என்பவர் தான் என்பது நமக்கு வந்த செய்தி.
இதற்கு முன்னால் மண்டல துணை வட்டாட்சியர் ஆக இருந்த இவரின் மெத்தன போக்கால் நடவடிக்கைக்காக இவரின் மேசைக்கு வந்த கோப்புகளில் பல இவர் கூடுதல் துணை வட்டாட்சியர் ஆக பொறுப்பேற்று மாறும் வரையில் அதே மேசையில் தூங்கிக் கொண்டிருந்தது என்பதும், வாரத்திற்கு ஒன்று என்று கோப்புகளை கையாண்டு இருந்தால் கூட இந்த அலுவலகத்துக்கு அலைந்து திரியும் பொது ஜனங்களின் ஒரு தொகையான மக்களின் எண்ணிக்கை கம்மியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
கலெக்டர் சொந்தக்காரராக இருந்தால் கஷ்டப்பட்டு எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கணும் கலெக்டர் வீட்டிலும் அல்லது அவர் அலுவலகத்திலும் சென்று உட்கார்ந்து கொள்ளலாமே! பாவம் இங்கு வந்து அலைந்து திரிந்து கஷ்டப்பட வேண்டியதில்லையே, கலெக்டர்கிட்ட சொல்லிட்டு வீட்ல படுத்துகிட்டு சம்பளம் வாங்க வேண்டியது தானே என்பது பொதுமக்களில் குமுறலாக உள்ளது என்பது சமூக ஆர்வலர்களிடமிருந்து நமக்கு வந்த தகவல்.
தமிழகம் எங்கும் இவர் போன்ற அதிகாரிகள் சில பலர் நிரம்பி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தன் கடமையை ஆற்றுவதற்கு முழு முயற்சியுடன் வேலை செய்யும் தற்போது மண்டல துணை வட்டாட்சியராக இருக்கும் திரு.தர்மேந்திரா போன்ற அதிகாரிகள் பலர் அரசு இயந்திரத்தில் ஆங்காங்கே நிரம்பி இருப்பதால் தான் அரசு என்னும் இயந்திரம் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அரசு எந்த ஒரு தனி நபரையும் சார்ந்து இயங்காது. அதிகாரிகள் அனைவரின் கூட்டு முயற்சியில் இயங்குவது என்பது நாம் அறிந்த ஒன்று. இது ஒரு சங்கிலித் தொடர் விளைவு. இதில் எந்த ஒரு இடத்தில் தொடர்பு நின்றாலும் அதன் பின்னர் எந்த நிகழ்வும் நடக்காது என்பதும் நிதர்சனமான உண்மை. இதை அரசு அதிகாரிகளாக இருக்கும் அனைவரும் அறிந்திருந்தாலும் ஒரு சிலர் அலட்சியத்தால் தன் வேலையை செய்யாமல் உதாசீனப்படுத்துவதாலும் அல்லது மற்றவர் வேலையை செய்ய விடாமல் தடுப்பதாலும் அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகள் எதுவும் நடக்காமல் நின்று போகிறது. இதனால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாவதோடு அரசின் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் உண்டான நம்பிக்கையை பொதுமக்களிடையே கேள்விக்குறியாக்குகிறது.
இது போன்ற நேரங்களில் அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது இவர் மாதிரி அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே ஆகும். கண்டுகொள்வாரப் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் ஆட்சியர்? பாயுமா இவர் மீது சட்ட நடவடிக்கை? பொறுத்திருந்து பார்ப்போம்.