அசந்து போன உடம்புக்கு அசாத்திய தெம்பு
அந்திமாலை நேரத்திலே உசுப்பிடும் கரும்பு
அந்திவேளை தேநீரோ சுறுசுறுப்பை தூண்டிவிடும்
ஐந்துமணி ஆகிவிட்டால் புத்துணர்ச்சி வந்துவிடும்
மாலைநேரம் வந்துவிட்டால் மனசெல்லாம் சோர்ந்துவிடும்
மடக்கென பருகிவிட்டால் விறுவிறுப்பை அடைந்துவிடும்
சாயங்காலம் உழைப்பு சோராமல் இருக்க
சாலையோர தேநீர்கடைகள் தேனீரை சுரக்க
இழந்துவிட்ட சக்திபெற கும்பலாய் குடிக்க
இதயங்கள் சூடாகி சோம்பலை முறிக்க
வெண்ணீரையும் பாலையும் வெவ்வேறாய் சூடாக்கி
வெல்லமும் தேயிலையும் வெட்கபடாமல் ஒன்றாக்கி
வடிகட்டி கலந்து குடிக்கும் தேயிலை
வந்தமர்ந்து வாங்கிபருக அலுப்புதீரும் அந்திமாலை
- சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்