தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, துணைச் செயலாளர் கௌதமன், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06004) தாம்பரத்திற்கு நேற்று மாலை 3.40 மணியளவில் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் பேராவூரணியில் இரவு.9.30மணிக்கு 1 நிமிடம் நின்று சென்றது. இதில் 35 பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். 23 பயணிகள் முன்பதிவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி ராஜேந்திரன் கூறியதாவது, திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயிலில் பேராவூரணியில் இருந்து 35 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை மற்றும் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என கூறினார்.