தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமார் பேராவூரணி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிருந்தார். அதில் கடைவீதியில் அமைந்துள்ள பராமரிக்கப்படும் பட்டுக்கோட்டை & பேராவூரணி -அறந்தாங்கி சாலை (M-653) மாவட்ட நெடுஞ்சாலைத்துறையால் முக்கிய சாலையாகும். இச்சாலையில் கி.மீ.17/2 – 18/4-ல் (ABCRISM) திட்டத்தின் மூலம் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு, மையத்தடுப்பான் மற்றும் மழைநீர் வடிகால் வாய்கால் அமைக்கப்பட்டுள்ளது.
சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் மீது அமையபெற்றுள்ள நடைபாதை முழுவதும் பேராவூரணி கடைத்தெரு வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பை போர்கால அடிப்படையில் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றும் நடவடிக்கையில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாதவண்ணம் உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு தபால் அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஸ்குமாருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.