தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும்.
குறிப்பாக பதிவுத்துறையில் மக்கள் தங்களுடைய சொத்துக்களை பதிவு செய்வதற்காக தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தையும், அதற்கென்று வசூலிக்கப்படும் பணத்தையும் ஆன்லைனில் தான் செலுத்த இயலும். இதில் ஏற்படும் குளறுபடிகளை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். இவ்வாறு ஆன்லைனில் செலுத்தும் பணங்கள் ஒரு லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள பணங்கள் சரியான நேரத்தில் உடனே தங்களுடைய அப்பாயின்மென்ட் மற்றும் பண ரசீது அச்சிடப்படுகிறது. ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் செலுத்தும் பொழுது மக்களுக்கு பண ரசீது பெற இயலவில்லை. இதனால் மக்கள் தங்களுடைய சொத்துக்களை பதிவு செய்யவும் முடியாத அவல நிலை ஏற்படுகிறது.
இந்த இடர்பாடுகளை பற்றி ஆராய நம்முடைய நீதியின் நுண்ணறிவு சென்னை சாந்தோம் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்றது அங்குள்ள அதிகாரிகளை காண மூன்று மணி நேரம் காத்திருந்தது, கடைசியில் அதற்கான அதிகாரியை சென்று கண்ட பொழுது நீங்கள் 24 மணி நேரம் கழித்து உங்களுடைய பண ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இது எப்போதும் நடக்கிற காரியம் தான் என்று அலட்சியமாக தங்களுடைய பதிலை கூறினர்.
தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று பெரும் தொகைகள் 24 மணி நேரம் கழித்து தங்கள் ரசீது கிடைக்கும் என்றால் இந்த 24 மணி நேரத்துக்கான அதாவது ஒரு நாளுக்கான வட்டி யார் தருவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. பதிவுத்துறையின் இந்த மெத்தன போக்கை நீதியின் நுண்ணறிவு கண்டிக்கின்றது. மக்களுக்கான ஆன்லைன் சேவையை சிறந்த முறையில் தரும்படியாக, தமிழ்நாடு அரசிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறது.
இதனை பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கண்டுகொள்வாரா..?