குற்றாலம் தென்தமிழகத்தில் சீசன் களில் பல லட்சம்பேர் வந்து செல்லும் ஆண்மீகம் கலந்த மிகமுக்கியம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
இது பழமைவாய்ந்த சித்ரசபை, திருக்குற்றாலநாதர் கோவிலும் மேலும் செண்பகாதேவி அருவி பழையகுற்றாலம், சிற்றருவி, புலியருவி, பேரருவி, ஐந்தருவி ஆகியவற்றிக்கும் மேலாக தேன் அருவி ஆகியவற்றில் வழிந்தோடும் நீர் பொதிகைமலை என்றழைக்கப்படும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அறியவகை மூலிகை தாவரங்களைத் தொட்டுத்தழுவி அனைத்து ஜீவராசிகளுக்கும் பயனளிக்க இயற்க்கை தந்த வரப்பிரசாதமான மூலிகைநீர் தரையை தொட்டபின்பு குற்றாலத்தின் பெருமைகளையெல்லாம் சீர்குலைக்கும் விதமாக ஆற்றுகரையோர பொதுக்கழிப்பறைகளின் மனித மலக்கழிவுகள், பிரபல விடுதிகளின் கழிப்பறை கழிவுகள், ஓட்டல்களின் கழிவுகள் என கலந்து சிற்றாறுகளின் மூலம் பல ஊர்கள் வழியாக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் விவசாயம், வீட்டுவிலங்குககள் பயன்பாடு என எல்லாவற்றையும் மாசு படுத்தும் போக்கு ஏனோ நிர்வாகத்தினரின் கண்டுகொள்ளாத தன்மையால் பலஆண்டுகளாக தீர்வுகாணப்படாத மர்மமாகவே நீடித்து வருதாக அப்பகுதி மக்களில் விபரமரிந்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் யாரும் விஷேச நாட்களுக்கு கூட தர்ப்பணம், பிண்டம் கரைக்க கூட இந்த ஆற்றை பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
மேலும் விபரம் அறியா சுற்றுலாபயணிகளில் ஒருசிலர் கூட்டம் காரணமாக இந்த மலம் கலந்த நீரில் நீராடி மகிழ்ந்துசெல்கின்றனர். இதில் நகைச்சுவை என்ன வென்றால் குளித்துமுடித்து வருபவர்கள் அருவியைவிட நல்ல உற்ச்சாக குளியல் என்றும் தண்ணீரின் சுவை அலாதி சுவையென்றும் தனக்குள் பாராட்டி மகிழ்வது உண்மை தெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கின்றதாக இருந்தாலும்… இந்த சுகாதார சீர்கேட்டின் வெளிப்பாடு அதன்மீதன அக்கரையற்ற சமூகம்,நடவடிக்கைஎடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்காத நிர்வாகம் என அனைவருக்கும் இந்த குற்றத்தில் பங்குண்டு எனலாம்.
இனியேனும் ஆய்வு நடவடிக்கை மூலம் உரிய தீர்வுகானுமா…? மாவட்ட நிர்வாகம்…!
– பூவைய்யா, நிருபர்