தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து புதிய மின் இணைப்பை பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதத்தை மின்வாரியமே செலுத்த வேண்டும் என புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வர உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.