தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர் அலுவலகத்தில் தான் இந்த நிலை.இங்குள்ள RJD திரு.பாஸ்கர் அவர்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்கள் பலருக்கும் இந்த அலுவலகத்தின் மூலம்தான் (EL) Earn Leave (பத்தாண்டுகளுக்கான விடுமுறை கணக்கீடுத்தொகை) வழங்கவும், (LPA) LEAVE ON PRIVATE AFFAIR (கால விடுமுறை கணக்கீடு செய்து வழங்க வேண்டிய தொகைக்கு) அவரவர் பணிபுரிந்த கல்லூரிகளில் பதிவேட்டின் படியான முதல்வர் அறிக்கை வந்தபின்பு அலுவலக கிளார்க் சரிபார்ப்புக்கு பின்பு கண்காணிப்பாளர் II அதன்பின் AO அதற்குபின் அதற்கான ஒப்புதலை வழங்க வேண்டிய நிலையில் தான் RJD இவர்களிடம் ஃபைல்கள் இறுதி ஒப்புதலுக்கு வரும்.
அப்போதுதான் கையூட்டு பெரும் நோக்கத்தை மறைமுகமாக “அரசு இந்த மாதிரி பைனான்சியல் ஃபைல்களை ஓரங்கட்டுங்கள் அரசு கஜானா காலியாக உள்ளது” எனவும் ஆகவே பெண்டிங் வைத்து தொகையினை தாமதப்படுத்துமாறும் மேல்மட்டத்தில் தெரிவித்துள்ளாதாக கூறி முதலில் அலைய வைப்பது. ஆனால் இதன்மூலம் கிடைத்த வருவாய்கொண்டு இவருக்கு மட்டுமே திருநெல்வேலி சுற்றி நிலங்கள் வாங்கி போட்டுள்ளாதாக தெரிகிறது. மேலும் இவரின் அக்கா பொண்ணு ஒன்றை அமைச்சர் திரு.பொன்முடியின் மிக நெருங்கிய உறவுக்கு கட்டிக்கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனாலையே என்னவோ… ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை வேண்டுமென்று தாமதப்படுத்திவருதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷயம் அப்படியிருக்க ஒருசிலருக்கு வழங்க வேண்டியுள்ள தொகைகளுக்கு ஏற்றவாரு கையூட்டு ₹25,000/வரை வாங்கிக்கொண்டு அவர்களது ஃபைல்களை மட்டும் கையொப்பமிட்டு அனுப்பி பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது. இந்த பகல் கொள்ளை எவ்வித கூச்சநாச்சமும் இன்றி பட்டபகலில் ஜரூராக நடைபெற்றுவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். இதில் ஒருசிலர் தனக்கான பணத்தை பெற நேர்மையான முறையில் போராடியும் வருகின்றனர்.
இதற்காக கடந்த 2022 மே மாதம் முதல் இன்றுவரையிலும் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் திருநெல்வேலி RJD யின் அலுவலகத்திற்கு நடையாய் நடக்கும் அவலநிலையும் நடந்தேறி வருகிறது. ஓய்வுபெற்றவர்களை கூட ஓய்வில்லாமல் அலையவிடுவது வேதனையை தருகிறது.
இப்படிப்பட்ட பட்டபகல் கொள்ளையர்களுக்கு கையூட்டு பெற துணைபோகாத அதிகாரிகளுக்கு மெமோ வழங்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. லஞ்சத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இதற்காக காமெடி நடிகர் வடிவேலு பாணியில் அலுவலக டிரைவர், உள்ளிட்ட இரண்டெழுத்து பெயர் கொண்ட பணியாளர்களை கொண்ட டீம் செயல்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது. மேலும் லஞ்சம் குடுத்து பணம்பெற்றவர்கள் மத்தியில் பத்து லட்சம் வரை EL-LPA பேமன்ட் பெருபவர்கள் “வெரும் 25,000/ கேட்டா குடுத்து காரியத்த சாதிச்சுட்டு போவீங்களா”என்று இலவச அறிவுரைகளை பலரும் வழங்கும் நேரத்தில் உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் ரிட்டையர்டு பென்சனை வழங்க பைனான்ஸ் பற்றாக்குறை என்ற காரணத்தை கூறக்கூடாது என்று தெரிவித்திருந்தும் அதனையே மிஞ்சி செயல்படும் இவர்களை என்னதான் செய்வது….? ஆயினும் “இது எங்கள் பணம் எனவே நேர்மையாக கிடைத்தால் கிடைக்கட்டும் அதற்க்காக RJD பாஸ்கரனுக்கு லஞ்சம் தந்து பெறமாட்டோம் “என காத்திருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் பலருக்கும் ஓர் ராயல் சல்யூட்.