தமிழகத்தின் சென்னை – கோவை – திருப்பூர் – திருச்சி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியைபேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பொதுவான பேச்சுமொழி இந்தி. இவர்களின் போர்வையில் நேபாளம் மற்றும் வங்க தேசத்தினரும் சட்டவிரோதமாக நம் நாட்டில் புகுந்து பணிபுரிந்து வருகின்றனர். நம் சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரும்பொழுது அவர்களை தீவிர விசாரணைக்கு பிறகு முகாம்களில் தங்கவைத்து அரசின் கண்காணிப்பில் இருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் சிலர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் நிலை இப்படி இருக்கையில் நேபாளிகள் மற்றும் வங்கதேசத்தினர் எந்தவித கட்டுப்பாடும் கண்காணிப்பும் இன்றி சுதந்திரமாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் தவறான தகவல்கள் அளித்து முதலில் ஆதார் கார்டு பெற்று அதன்பிறகு ரேசன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெறுகின்றனர். நம்மவர்கள் ஆதார் அட்டை சிறு திருத்தம் கேட்டால் கூட ஏகப்பட்ட விசாரணைகள். ஆனால் இவர்களுக்கு எப்படி எந்த ஆவணமும் இன்றி எளிதில் அடையாள அட்டைகள் இன்றி எளிதில் அடையாள அட்டைகள் கிடைக்கின்றன. இந்த அடையாள அட்டைகளை காட்டி சொந்த வாகனங்கள் மற்றும் வீட்டு மனைகள் வாங்குகின்றனர். பார்போர்ட் பெருவதற்கும் வாய்பபு உள்ளது.
வந்தாரை வாழ வைப்பது தமிழர்களின் பண்பாடாக இருந்தாலும் நமது வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களிடம் சொந்த நாட்டின் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால் நம் நாட்டில் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தப்பி சென்றால் சிக்குவது கடினம். சட்டவிரோத குடியேறிகள், பாதுகாப்பு சங்கம் என இவர்கள் சங்கம் வைத்து எங்களை அகதிகளாக ஆக்கும் முன்பு அரசுகள் இவர்களை அடையாளம் கண்டு ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து அரசின் கண்காணிப்பில் வைப்பது மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பானது நாட்டின் நலன்கருதி.