தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு அரசு வேலைநாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் சுமார் 500 க்கும் மேற்ப்பட்டோர் பல்வேறு தேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.இந்த வளாகத்தை ஒட்டியுள்ள வருவாய் கோட்டாட்சியர், ஒருங்கினைந்த பத்திர பதிவுத்துறை, காவலர் அங்காடி, அரசு கருவூலம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் என மற்ற அலுவலகங்களில் கூட பொதுகழிப்பறை வசதியின்றி பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் ஆதார் மற்றும் இசேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் போது கூட்டம் அதிகமாகும் வேளைகளில் ஒதுங்க இடமின்றி அல்லல் படும் அவலநிலை நிலவுகிறது. அலுவலக கட்டிடத்தில் உள்ள கழிப்பறைகளை கூட பூட்டிட்டு அலுவலர்களில் ஒருசிலர் பயன்படுத்திவருவது வேதனையிலும் வேதனை. இதற்கிடையில் தென்காசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே கட்டப்பட்டு கவனிப்பாறின்றி கிடக்கும் இருபாலருக்கான கழிப்பறையையாவது சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்பது இங்கு வருவோரின் கோரிக்கையாக இருக்கின்றது.
அனைவருக்கும் வீட்டுக்கொரு கழிப்பறை திட்டம் இந்தியா முழுவதும் அமுலில் இருக்க…தென்காசியில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை மாறுமா…?
ஆத்திரத்தை அடக்கலாம்… என்ற சொல்லின் குமுறலோடும் எதிர்பார்ப்போடும்…தென்காசி பொதுமக்கள்.
- பூவையா.ஆர் தென்காசி