தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுதா அவர்கள் தலைமையிலான காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த கௌஸ் ஷெரீப் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.2,00,000 மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் Cool Lip போன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.