தாயின் தொப்புள்கொடியில் துளிர்த்தாள் மகள்
தங்கையாக அக்கவாக அம்மாவோட நகல்
தாரமாய் தாரைவார்த்து மருமகளாய் செல்வாள்
தாயைவிட்டு தாயாகி தாயையும் வெல்வாள்
தன்னலத்தை பார்க்காத தாய்மையின் தூய்மை
தாயகத்தின் பண்பாட்டை தாங்குகின்ற பெண்மை
பிறந்தவீட்டின் புகழை இகழாது காப்பாள்
புகுந்தவீட்டின் புனிதத்தை விலகாது வளர்ப்பாள்
ஆலமரமாய் அம்மா விழுதுகளாய் மகள்கள்
ஆணிவேர் அடங்கினாலும் அரவணைக்கும் விழுதுகள்
மகளும் மணமாகி மகளையும் பெறுவாள் மாறுகின்ற
உலகத்திலும் வேறுகளாய் வாழ்வாள்
மகளே மங்கையாகி தாரமாகி தாயாகி
மணந்தவனின் மனதுக்குள் கொண்டவளாய் குடும்பமாகி
பெற்றவளும் புகுந்தவளும் வந்தவழி செல்லமகளாக
போராட்டமே தொடர்கதையாய் சாதிக்கும் மருமகளாக
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்