நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கீழக்கரை இருப்பு கிராமத்தில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் என்று சொல்லக்கூடிய நாடோடி இன பழங்குடியினரின் முதல் தலைமுறை பிள்ளைகளுக்கான வானவில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு லிரிநி முதல் 5ஆம் வகுப்பு வரை 120 மாணவர்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் என 170 மாணவர்கள் இலவசமாக தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
இவர்களுக்கு நேசம் பாசறை அறக்கட்டளை சார்பில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு (26.092023) அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்கள். பள்ளி குழந்தைகள் தங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.