காவல்துறை உயர் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
சென்னை வடக்கு காவல் இணை ஆணையராகட் அபிஷேக் தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடை பணியாளர் தேர்வாணைய செயலாளராக தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பணிகள் சி.ஐ.டி டிஜிபி வன்னியப் பெருமாள் ஊர்க்காவல்படை கமாண்டன்ட்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி எஸ்.பி. சாம்சன் சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் கரூர் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி எஸ்பியாக இருந்த ஹரிகிரண் பிரசாத், ராமநாதபுரம் கடலோர காவல் எஸ்பியாக பணியிடமாற்றம்.செய்யப்பட்டுள்ளார்.
கரூர் எஸ்பியாக இருந்த சுந்தரவதனம் கன்னியாகுமரி எஸ்பியாக பணியிடமாற்றம்.செய்யப்பட்டுள்ளார்.
காவலர் பயிற்சி பள்ளி ஐஜியாக இருந்த தமிழ்ச்சந்திரன் சீருடை பணியாளர் தேர்வாணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கடலோர காவல் எஸ்பியாக இருந்த சுந்தர வடிவேல் நீலகிரி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த திஷா மிட்டல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக மாற்றம். செய்யப்பட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டிஜிபி அலுவலக எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.