தென்காசி மாவட்டம் குற்றால காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஏழு இடங்களில் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் கொள்ளை அடித்த காசி மேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா கடை உரிமையாளர் திருப்பதி குமார் என்பவரை துரிதவிசாரணை மேற்க்கொண்டு அவரிடமிருந்து திருடப்பட்ட மொத்த பொருட்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளியை விரைந்து கைது செய்த தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர், குற்றாலம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர், உள்ளடங்கிய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை காவலர் ,உள்ளிட்ட அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அழைத்து பாராட்டுத்தெரிவித்தார்.