புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 23 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். அதன்படி புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி இலுப்பூர் தனி தாசில்தாராகவும், கறம்பக்குடி ராமசாமி, கந்தர்வகோட்டைக்கும், அறந்தாங்கி பாலகிருஷ்ணன், காவிரி-வைகை-குண்டாறு அலகு-4 பிரிவுக்கும், விராலிமலை சதீஷ், டாஸ்மாக் உதவி மேலாளராகவும், பொன்னமராவதி பிரகாஷ், புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல குளத்தூர் தாசில்தார் சக்திவேல், பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும், கந்தர்வகோட்டை தாசில்தார் காமராசு, குளத்தூருக்கும், மணமேல்குடி சிவக்குமார், மணமேல்குடி தேசிய நெடுஞ்சாலை-32 நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், மணமேல்குடி தேசிய நெடுஞ்சாலை-32 நிலமெடுப்பு தனி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி தாசில்தாராகவும், ஆலங்குடி விஸ்வநாதன், புதுக்கோட்டை தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இலுப்பூர் தாசில்தார் ரமேஷ் ஆலங்குடி தனி தாசில்தாராகவும், ஆலங்குடி தனி தாசில்தார் பெரியநாயகி ஆலங்குடி தாசில்தாராகவும், புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியார் கவியரசு, புதுக்கோட்டை தாசில்தாராகவும், புதுக்கோட்டை நத்தம் நிலவரித்திட்டம் தனி தாசில்தார் கருப்பையா விராலிமலை தாசில்தாராகவும், புதுக்கோட்டை தனி தாசில்தார் சாந்தா, பொன்னமராவதி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அறந்தாங்கி தனி தாசில்தார் ஜபரூல்லா, அறந்தாங்கி தாசில்தாராகவும், மணமேல்குடி தனி தாசில்தார் நாகநாதன், கறம்பக்குடி தாசில்தாராகவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளர் கருப்பையா, காவிரி-வைகை-குண்டாறு அலகு-1 தனி தாசில்தாராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சூரியபிரபு இலுப்பூர் தாசில்தாராகவும், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு தாசில்தார் ரெத்தினாவதி, புதுக்கோட்டை தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி-வைகை-குண்டாறு அலகு-4 பிரிவு தனி தாசில்தார் ஜமுனா, அறந்தாங்கி தனி தாசில்தாராகவும், இலுப்பூர் தனி தாசில்தார் வனிதா, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு தாசில்தாராகவும், அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் வில்லியம் மோசஸ், மணமேல்குடி தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் ரெங்கராஜன் முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வருவாய்த்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.