புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி தனிப்படையினர் நகை திருட்டு மற்றும் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போன வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை அதிரடியாக கைது செய்து அவரிடமிருந்து 41 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளியை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.