தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி (01.12.2023) மாவட்ட ஆட்சியர் திரு.துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது, கிராமப்புற இளைஞர் / இளைஞிகளுக்கு பயிற்சியளித்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கிட ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கிகள் வாயிலாக கிராமிய சுய வேலைவாயப்பு பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது 30 மாவட்டங்களில் கிராமிய சுய வேலைவயாப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் புதியதாய் துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிராமப்புற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றமடைய 64 வகையான நவீன பயிற்சிகள் இந்த பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் 35 கிராமப்புற பெண்கள் தேர்வு செய்யப்ட்டு அவர்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது பயிற்சி முடித்த பெண்கள் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீராணம் கிளையின் மூலம் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
மேலும், கிராமப்புற மக்களை ஊக்குவிப்பதற்காக 64 வகையான நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டததில் விவசாயத்தை நம்பியே பல கிராமப்புற பகுதிகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் மழையைச் சார்ந்து மக்கள் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.
எனவே சுய தொழில் மூலமாக கிராமப்புற மக்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இதுபோன்ற கிராமப்புற மக்களுக்கு நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களை தொழில் முனைவோராக ஆக்கிட அரசு பல தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்வடையும் மேலும் பயிற்சி பெற்றவர்கள் அருகில் உள்ளவர்களையும் பயிற்சியில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வதற்கான வழி வகைகளை எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கணேசன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.திவ்யா மணிகண்டன், தென்காசி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி.ராஜேஷ்வரி, முன்னோடி வங்கி நிதி சார் கல்வியாளர் திரு. இளங்கோ, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வீராணம் கிளை மேலாளர் திரு.ராக்கேஷ், தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமதி.மாரியம்மாள், தாட்கோ மாவட்ட மேலாளர் திரு.ரமேஷ்குமார், நெட்டுர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ராஜேஸ்வரி, துணை தலைவர் திரு.சிவசுப்பிரமணியம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் திரளான கிராமப்புற பெண்கள் ஆண்கள் பலர் கலந்து கொண்டனர்.