அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதையடுத்து ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதாவது, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியம் 3 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத்தை 2023 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்களும், ஓய்வூதிய விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்தவர்களும், ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்களும் பெற்று பயனடையலாம்.