ஆயிரம் ஆசைகள் பிறக்கின்றன உன்னுடனே
ஆக்கப்பூர்வமாக்கிட திறன் வளர்த்திடு அறிஞனாக!
ஆயிரம் கடமைகள் விரிகின்றன கண்முன்னே
நிறைவேற்றிட திட்டம் வழங்கிடு வல்லுநராக!
ஆயிரம் சவால்கள் சொடுக்குகின்றன அனுதினமும்
சமாளித்திட துணிவு கொடுத்திடு தீரனாக!
ஆயிரம் வாய்ப்புகள் அழைக்கின்றன வாழ்வில்
வென்றிட அறிவு அளித்திடு ஆசானாக!
ஆயிரம் மணித்துளிகள் பரிசாகின்றன ஆண்டுதோறும்
பயன்படுத்திட மனதை பக்குவப்படுத்திடு ஞானியாக!
ஆயிரம் இன்பங்கள் இருக்கின்றன இப்பூவுலகில்
பகிர்ந்திட இரட்டிப்பாகிடு இனிய உறவாக !
ஆயிரம் துன்பங்கள் தொடர்கின்றன நினைவில்
பாரம் குறைந்திட தோள்கொடுத்திடு தோழனாக!
ஆயிரம் காரணங்கள் உண்டாகின்றன உதிர்வதற்கு
நித்தம் வாழ்வதற்கு மலர்ந்திடு புத்தாண்டாக!
-மீனாட்சி வெங்கடேஷ்