விடிந்தது காலையென
விழித்திடும் உலகிலே
விரைந்தது காலமென
நினைத்திடும் எண்ணத்திலே
துவங்கிய பாதையில்
தொடரும் வாழ்க்கை
துவளாது உழைக்க
இருக்கனும் நம்பிக்கை
ஆண்டொன்று போனால்
வயதொன்று கூட்டும்
ஆங்கிலமும் தமிழும்
மாதங்களாய் காட்டும்
பூமியொரு பூப்பந்து
வாழவைக்கும் மனமுவந்து
பிறந்திட்டால் வாழ்ந்திடலாம்
மனதுக்குள் உன்னையறிந்து
பனிரெண்டு மாதங்கள்
பாதைகாட்டும் பயணங்கள்
பஞ்சம்பசி இல்லாது
கொஞ்சிபேசும் குணங்கள்
வஞ்சகம் இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்திட
வறுமையை விரட்டிடும்
உழைப்பை தந்திட
வானமும் பூமியும்
வசிப்பவர்களுக்கு உதவிட
வருடங்கள் புதுப்பிக்க
புத்தாண்டு பிறந்திட
மகிழ்ச்சியும் மனநிறைவும்
மனதினில் பூத்திட
மண்ணையும் பொன்னாக்கி
இல்லங்கள் நிறைந்திட
புறப்பட்டுவரும் புத்தாண்டை
போகும்வருடம் வரவேற்க
புன்னகையும் பூரிப்பும்
உள்ளத்தில் நிலைத்திற்க
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்