தஞ்சை மறைமாவட்டம், நாகப்பட்டினம் மறைவட்டம், கோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனிதர் அந்தோனியார் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திருப்பலியும் தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற்றமும், மதியம், இரவு வேண்டுதல் வைத்தவர்கள் ஆலயத்தில் சமைத்து உணவு வழங்குவது வழக்கம். இத்திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஜூன் மாதம் முதல் வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
கோகூரில் திருத்தலம் கொண்டு அமைந்துள்ள கோடிஅற்புதர் புனிதர் அந்தோணியார் வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து அற்புதம் செய்து வருகிறார்.
இந்த திருத்தலம் திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேலூரிலிருந்து வடக்கே சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. தற்போதைய பங்குதந்தை அருட்திரு, டி.தேவசகாயம் அடிகளார் முழு முயற்சி செய்து திருத்தலத்தை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் துபாயில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் முனைவர், எஸ்.பென்சன்எட்வின்ராஜ் என்பவர் கோகூர் புனித அந்தோணியார்திருத்தலத்தில் வேண்டுதல் வைத்து நிறைவேற அதன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சமைல் செய்து அனைவருக்கும் உணவளித்தார். மேலும் இந்த ஆலயத்திற்கு கொடிமரம் அமைக்க முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார். அதன் பலனாக அவர் விரும்பியபடி தஞ்சையில் நிலங்கள் வாங்கியுள்ளார். அவருக்கு ஜெஸ்டீனாபிரியா என்ற துணை கிடைத்து திருமணம் நடந்துள்ளது. மகிழச்சியடைந்த அவர் அவரின் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 15 லட்சம் செலவு செய்து 81 அடியில் கொடி மரத்தை அமைத்தார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பங்குதந்தை அருட்திரு , தேவசகாயம் அடிகளார் தலைமை வகித்தார். புதியகொடிமரத்தை பேராசிரியர் எஸ். பென்சன்எட்வின்ராஜ், ஜெஸ்டீனாபிரியா தம்பதியினர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.அருட்தந்தை தேவசகாயம் அடிகளார் கொடிமரத்தை தூபம் காட்டி புனிதம் செய்து மந்திரித்தார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை நாகை மறைவட்ட அதிபர் அருட்திரு. ஜி.வி.பன்னீர்செல்வம் அடிகளார் தலைமையில் காரைக்கால் மறைவட்ட அதிபர் அருட்திரு, ஜோஸ்வா அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்பலியில் அருட்தந்தையர்கள், வேளாங்கன்னி செபாஸ்டின், திருவாரூர் ஜெரால்டு, கலங்கரை குழந்தை, பிரான்சீஸ், பள்ளங்கோயில் அமிர்தராஜ், பட்டுக்கோட்டை ஸ்டீபன்ராஜ், சந்தனராஜ், புனல்வாசல் ஜான்சன், வீரக்குறிச்சி ஜோசப் குழந்தை, பாளையங்கோட்டை ஜேசுராஜ், தஞ்சை விக்டர்அலெக்ஸ், நாகை ராயல்பிரிட்டோ, காரையூர் அந்தோணிசாமி, மூலங்குடி பெர்னாடு, நாகூர் ஆரோக்கியசாமி, மதுக்கூர் சகாயராஜ், வேளாங்கண்ணி டிஎஸ்பி.வில்சன் உள்ளிட்ட அருட் தந்தையர்கள், இறைமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து திருத்தேர்பவனி நடைபெற்றது.
– DR.வேத குஞ்சருளன்