கிராமத்தின் தொலைவிலே
உயரத்தில் பனைமரங்கள்
கிளைகள் இல்லாது
வரிசையாய் வாழும்மரங்கள்
தவிக்கும் மனிதர்களுக்கு
தன்னையே அர்ப்பணிக்கும்
தாகங்கள் தீர்ப்பதற்கு
பதநீராய் பசிதீர்க்கும்
மரங்களின் துண்டுகளோ
வீடுகளாய் வீற்றிருக்கும்
மரமேறும் தமிழர்களுக்கு
தன்னையே தானமாக்கும்
பனைமட்டைகள் வேலியமைத்து
ஏழைகளுக்கு வாழ்வளிக்கும்
பனைஓலைகள் பாயமைத்து
பாமரர்களை பாதுகாக்கும்
பனங்காய்கள் பசித்தவர்களுக்கு
பக்குவமாய் ருசித்திருக்கும்
பனம்பழமும் சுடவைத்து
சப்பிசாப்பிட சுவைத்திருக்கும்
பனங்கொட்டைகள் பதியம்வைத்து
கிழங்குகளாய் வாய்மெல்லும்
பராமரிக்காத மனிதர்களுக்கு
தன்னுருவத்தையே தானமாக்கும்
ஊருக்கு ஒதுக்குபுறம்
வயல்காட்டில் ஒதுங்கிவாழும்
உறவாடும் உள்ளங்களுக்கு
உதவிடும் வள்ளல்இனம்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்