தென்மண்டல காவல்துறை தலைவர் திரு Dr.N. கண்ணன் IPS., அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் முன்னிலையில் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். இறுதியாக சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நட்டு வைத்தார்கள்..