தஞ்சை மாவட்டம், தஞ்சை தெற்கு மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டதில் கடை கோடி பகுதியான பேராவூரணி சட்டமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், எளிய மருத்துவ வசதியினை மக்களுக்கு அளிக்கும் வகையிலும், செவிலியர் பயிற்சிக்கல்லூரி ஒன்றும், பாராமெடிக்கல் பயிற்சிக்கல்லூரி வழங்கவும் தஞ்சை தெற்கு மாவட்டத்தினை உள்ளடங்கிய பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதியில் உள்ள சாலையில் அதிக விபத்துக்கள் நேரிடுவதால் உடனடி ஈசிஆர் சிகிச்சை வழங்குவதற்கு எளிதாக தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனையம் ஏற்படுத்தி தரவும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 400 படுக்கைகள் வசதிகளுடன் தரம் உயர்த்தி தருமாறும் கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் நாகை முன்னாள் எம்பி விஜயன், தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சென்னை மேயர் பிரியா, மாநில மருத்துவஅணி செயலாளர் டாக்டர் எழிலன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் க.அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.