தஞ்சாவூர் தெற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் தனது காவல்துறை பணிமட்டுமின்றி சமுதாய சிந்தனையுடனும் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக தனது அலுவலகத்திலேயே காவல் வரவேற்பறையில் தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றம் தொடர்பான புத்தகங்களை கொண்டு சிறுநூலகம் அமைத்துள்ளதை சொல்லலாம்.
மேலும் அருகிலுள்ள பள்ளியில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெற “உன்னை நீ உணர்” என்ற தலைப்பில் மோட்டிவேசன் வகுப்பிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். கல்வி மட்டுமே ஒருவரை சமுதாயத்தில் முன்னேறச் செய்யும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.